வரம்பை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவின வரம்பை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
    
எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்பது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த பஃப்ரல் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிகமாக அனைத்து அரசியல் கட்சிகளின் சுயேச்சைக் குழுக்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் தொடர்பான சட்டமூலம் ஜனவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் குறைந்தபட்சம் 15 ரூபாயும் அரசியல் கட்சியொன்று குறைந்தபட்சம் 08 ரூபாயும் செலவிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!