விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட நாளன்று இறுதிப்போரும் நிறைவுக்கு வந்தது! மகிந்த

இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி வதந்தி பரப்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.  இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், வன்னியில் இராணுவத்தினருடனான மோதலில் பிரபாகரன் கொல்லப்பட்ட நாளன்று இறுதிப்போரும் நிறைவுக்கு வந்தது.
போர் வெற்றியும் அன்று எம்மால் அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த பிரபாகரனின் சடலத்தை எமது இராணுவத்தினர் கைப்பற்றி நல்லடக்கம் செய்தனர். இது யாவரும் அறிந்த உண்மை என சுட்டிக்காட்டியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!