பசிலின் சொத்துப் பட்டியலை அம்பலப்படுத்தியே தீருவோம்: விமல் வீரவன்ச

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் அமெரிக்கச் சொத்துப் பட்டியலை விரைவில் வெளியிட்டே தீருவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, தமது அணி இனி ஒருபோதும் மொட்டுக் கட்சியிடம் சரணடையாது என அவர் சூளுரைத்துள்ளார்.

இதன்படி நாட்டை அழித்த மொட்டுக் கட்சிக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!