டெங்கு அபாய வலயத்தில் 12 மாவட்டங்கள் – யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்!

தற்போது நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களே டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 3,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!