“இனி விடுமுறை இல்லை” – பிரிட்டன் அரசின் அதிரடி திட்டம்!

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்குவதில் அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பவர்கள் மூலம் பிரித்தானியாவில் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை நாட்டின் பொருளாதார தடுமாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அரசாங்கம் மற்றும் கருவூல அதிகாரிகள் நம்புகின்றனர்.
    
தொழிலாளர்கள் கணக்கெடுப்பின் படி, கடந்த ஆண்டு 2.32 மில்லியன் மக்கள் நீண்ட கால நோய்களால் வேலையில் இருந்து வெளியேறியுள்ளனர், இது 2019-ல் 1.95 மில்லியனாக இருந்தது.
இதற்கிடையில் எழுந்த கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காரணமாக மக்கள் மத்தியில் உருவான பயம் போன்ற மனநோய்கள் நூற்றுக்கணக்கான மக்களை வேலைகளில் இருந்து வெளியேற செய்தது.

ஆனால் தற்போது தொற்று நோய் பரவலானது கட்டுப்பாட்டிற்குள் வந்து இருக்கும் நிலையிலும், தொழிலாளர் தேவை என்பது தொற்று நோய்க்கு முந்தைய நிலைகளை விட அதிகமாக இருப்பதாக 2022 ஆம் ஆண்டின் பிரித்தானிய நாணய கொள்கை அறிக்கையின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2022க்கு இடையில், பிரித்தானியாவில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பொருளாதாரத்தில் குறைந்த பங்கேற்புக்கு முக்கிய காரணமாக நீண்ட கால நோயை மேற்கோள் காட்டியுள்ளனர். இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரித்தானியாவில் நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு விடுப்புகள் மறுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக குறைவான நோய்வாய்ப்பட்ட குறிப்புகளில் மருத்துவர்கள் கையெழுத்திடுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலையின் நன்மைகளை முன்னிலைப்படுத்த டாக்டர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், மேலும் தொழிலாளர்களை சந்தையில் இருந்து விலக்கி வைக்கும் நோய்வாய்ப்பட்ட குறிப்புகளை மறுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். மார்ச் 15ம் திகதி பிரித்தானியாவின் பட்ஜெட் தினத்தன்று நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், வேலைக்கு வெளியே உள்ள மக்களை மீண்டும் திரும்ப பெறுதல் அட்டவணைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!