கனேடிய பொறியியலாளரின் புதிய கண்டுபிடிப்பு!

கனடாவின் ரெஜினா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பொறியியலாளர் டெனிஸ் ஸ்டெர்லிங் முகக் கவசங்களை மீள் சுழற்சி செய்வது தொடர்பிலான கண்டு பிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்களினால் சுற்றுச்சுழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை இந்த பேராசிரியர் மேற்கொண்டுள்ளார்.
    
ஒரு தடவை பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் பெரும்பாலும் பொலிபொரப்பலின் எனப்படும் பிளாஸ்டிக் வகைகளைக் கொண்டமைந்துள்ளது எனவும் இவை உக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முகக் கவசங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றை வெப்பமாக்குவதன் மூலம் அவற்றை பல்வேறு பயனுள்ள பொருட்களாக உருமாற்றம் செய்து வருகின்றார்.

பழைய டயர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பயன்படுத்தி இவ்வாறு புதிய உற்பத்திகளை மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய டைல்கள், சமையலறையில் பயன்படுத்தப்படும் கவுன்டர் டோப்கள் முதல் நடைபாதையில் பயன்படுத்தப்படும் புளொக் கற்கள் வரையில் இந்த கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்க முடியும் என பேராசிரியர் டெனிஸ் ஸ்டெர்லிங் தெரிவிக்கின்றார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!