‘ஸ்ட்ரெப் எ’ தொற்றுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி!

நியூபிரிட்ஜ், சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருப்பின் குளியலறை தரையில் இறந்து கிடந்த 6 வயது சிறுவன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் தெரியவந்த தகவல் குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சம்பவத்தன்று பகல் 7.30 மணியளவில் தான் 6 வயது சிறுவன் Brodie Lee Morgan குளியலறை தரையில் சலனமற்று கிடந்துள்ளான். பதறிப்போன தாயார் Jamie Lee உடனடியாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.
    
ஆனால், அவசர மருத்துவ உதவிக்குழுவினரால் சிறுவன் Brodie Lee Morgan-ஐ காப்பாற்ற முடியாமல் போனது. தாயார் Jamie Lee உடன் மிகவும் நண்பர்கள் போலவே பழகி வந்துள்ளான் சிறுவன் Brodie Lee Morgan. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் மரணம் தொடர்பான சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் காணவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் Brodie எப்போதுமே வீட்டுக்கு வெளியே, தமது நண்பர்களுடன் விளையாடுவதையே அதிகம் விரும்புவதாகவும், பள்ளி நண்பர்களுடன் நேரம் செலவிடுவதையே சிறுவன் Brodie அதிகம் விரும்புவதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். உடற்கூராய்வில் தான் சிறுவன் Brodie Strep A தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதனால் மரணம் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிரித்தானியாவில் Strep A தொற்றுக்கு 40 சிறார்கள் பலியாகியுள்ளனர். வேல்ஸ் பகுதியில் 5 சிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!