நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கிறார் ஜனாதிபதி!

உள்ளூராட்சி சபைத்தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்க முடியும். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நீதிமன்றத்தால் தீர்வு வழங்க முடியாது என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.,எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதியின் செயற்பாடுகள் தேர்தலை பிற்போடும் வகையில் காணப்படுகின்றன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட தலைவர். ஆகவே அவர் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காமல் அரச தரப்பிற்காக செயற்படுகிறார்.

உள்ளூராட்சி சபைத்தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்க முடியும். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நீதிமன்றத்தால் தீர்வு வழங்க முடியாது என குறிப்பிட்டு ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கிறார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!