வெளியுறவு கொள்கை முக்கியம்!

சீனா, இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளுடன் மூலோபாய நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நல்ல உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எடுத்துரைத்தார்.
    
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான இலங்கை, வல்லரசுகளால் சூழப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் . இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதால் பொருளாதாரம் உலகச் சந்தைகளில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டஅவர் , உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகள் உலக சந்தையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மாத்திரமே இலங்கையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். எவ்வாறாயினும், இலங்கை தனது சுதந்திரத்தை வலுவாகப் பாதுகாப்பதாகவும், சுதந்திர நாடாக இருப்பதற்கு வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானது. நாட்டின் பாதுகாப்புப் படைகளின் நலனுக்காகவும், சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயரை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பை அதிகரிக்க ஐ.நா.வுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரில் தற்போது இலங்கையின் பங்கு பிராந்திய நாடுகளை விட மிகவும் குறைவாக இருப்பதாகவும், அரசியலமைப்பு சதித்திட்டத்தின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அது வீழ்ச்சியடைந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன தெரிவித்தார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை சிறிலங்கா தீவிரமாக கவனத்தில் கொள்ளாத வரையில், இலங்கையின் நிலைப்பாடு மேம்படும் என்பது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!