இத்தாலி நோக்கி பயணித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலி!

துருக்கி நாட்டில் இருந்து படகில் இத்தாலிக்கு பயணித்த புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் பேரழிவால் துருக்கி, சிரியா நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் துருக்கியில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகில் பயணித்தனர்.
    
இத்தாலி நோக்கி சென்ற அவர்கள் சென்ற படகு, குரோடோன் நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக விபத்தில் சிக்கியது. பாறைகள் மீது படகு மோதியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 61 பேர் பரிதாபமாக பலியாகினர். முதற்கட்டமாக 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 30 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!