சீன சந்தைக்குச் செல்லும் சிறிலங்காவின் வாழைப்பழங்கள்

சீனச் சந்தைக்கு, சிறிலங்காவின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் சிறிலங்காவின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது.

சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

‘உயர் தரமான, அம்புல் ( புளி வாழைப்பழமை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ஆகிய ரகங்களே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

சிறிலங்காவில் சுமார் 29 வகையான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல சிறிலங்காவை தாயகமாக கொண்டவை.

இங்கு பரவலாக வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், 450,000 மெட்றிக் தொன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!