மத்தலவினால் தேவையற்ற மோதலுக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளும் – மகிந்த எச்சரிக்கை

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தங்காலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர்,

“நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த நடவடிக்கையினால், எமது நாடு பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றிச் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!