வடக்கு மாகாணசபையை கோமாளிகளின் கூடாரம் என்கிறார் வரதர்!

வடக்கு மாகாண சபையை கோமா­ளி­க­ளின் கூடா­ரம் என்று முன்­னாள் வடக்கு- கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர் வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள் தெரி­வித்­தார்.

கறுப்பு ஜூலைக் கல­வ­ரங்­கள், வெலிக்­க­டைச் ­சி­றைப் படு­கொ­லை­கள் நினை­வஞ்­ச­லிப் பொதுக்­கூட்­டம் கர­வெட்­டிப் பிர­தே­ச­சபை மண்­ட­பத்­தில் மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கம் தலை­மை­யில் நேற்று மாலை 4.30 மணிக்கு இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.

எமது ஈழப் ­போ­ராட்­டம் 1987ஆம் ஆண்டே தோற்­க­டிக்­கப்­பட்­டு­ விட்­டது. நாம் அப்­பொ­ழுதே ஒற்­று­மை­யாய் இருந்­தி­ருந்­தால் ஒரு தீர்வு கிடைத்­தி­ருக்­கும். ஆனால் இன்று நாடா­ளு­மன்ற தேர்­தல், மாகா­ண­ச­பைத் தேர்­தல்­க­ளில் அர­சி­யல் கட்­சி­கள் தமது பத­வி­க­ளை­யும், ஆச­னங்­க­ளை­யும் தக்­க­வைப்­ப­தற்­கா­கவே செயற்­ப­டு­கின்ற்­றன. தேர்­தலை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே ஒற்­றுமை என்­பது தெரி­கி­றது.

வடக்கு மாகா­ண­சபை கோமா­ளி­க­ளின் கூடா­ர­மாக இருக்­கி­றது. மாகாண சபை­யில் 350 தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­ற­றப்­ப­டுள்­ளன. அவற்­றால் பயன் ஏதும் இல்லை. இன்­று­வரை மாகாண சபைக்கு அதி­கா­ரம் வழங்­க­ வேண்­டும் என்று எந்­த­வொரு வழக்­கும் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை.நானாக இருந்­தால் 200க்கும் மேற்­பட்ட வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­தி­ருப்­பேன்.

நாற்­பது வருட நீதி­மன்ற அனு­ப­வ­முள்ள சட்­ட­மேதை எந்­த­வொரு வழக்­கை­யும் தமது அதி­கா­ரத்தை வலி­யு­றுத்தி தாக்­கல் செய்­ய­வில்லை. அலி­பா­பா­வும் நாற்­பது திரு­டர்­க­ளை­யும் போல மாகாண சபை­யில் நான்கு அமைச்­சர்­க­ளும் ஊழல்­வா­தி­கள் என்று முதல்­வர் கூறி­னார். அப்­ப­டிப்­பட்ட ஊழல்­வா­தி­களை அமைச்­சர்­க­ளாக நிய­மித்த முதல்­வ­ரும் தானா­கவே வெளி­யே­றி­யி­ருக்­க­ வேண்­டும். ஆனால் அப்­படி நடக்­க­வில்லை.

எமது போராட்­டம் தோற்­ற­மைக்கு ஒற்­று­மை­யின்­மையே கார­ணம். நாம் ஒற்­று­மை­யாக இருந்­தி­ருந்­தால் போராட்­டம் தோற்­றி­ருக்­காது -என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!