முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல ஊடகவியலாளரும், இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான ஜே.ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு சம்பவத்தில் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இவரது கைது இடம்பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!