கேரளாவில் வழக்கறிஞரான முதல் திருநங்கை!

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார் பத்ம லட்சுமி. கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தபோது முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையை பத்ம லட்சுமி பெற்றார். ஞாயிற்றுக்கிழமை இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பார் சேர்க்கை சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட சட்டப் பட்டதாரிகளில் பத்ம லட்சுமியும் ஒருவர்.

பத்ம லட்சுமி இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி.யில் சேர்ந்தார். பயிற்சிக்குப் பிறகு நீதித்துறைப் பணித் தேர்வில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளார். கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ், வழக்கறிஞர் பத்ம லட்சுமியின் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் தாண்டி கேரளாவில் முதல் திருநங்கை வழக்கறிஞராக சேர்ந்த பத்மா லட்சுமிக்கு வாழ்த்துக்கள். இதையெல்லாம் தாண்டி பத்ம லட்சுமி தனது பெயரை சட்ட வரலாற்றில் எழுதி வைத்துள்ளார்” என அமைச்சர் ராஜீவ் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். பத்மலட்சுமியின் வாழ்க்கை திருநங்கைகளைச் சேர்ந்த பலரை வழக்கறிஞர் தொழிலில் நுழைய ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!