நாவலர் கலாசார மண்டபத்தை ஆக்கிரமிக்கும் ஆளுநர்!

நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ்.மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீலுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பலதடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்pற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது அப்போது 45 உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டதுடன் எக் காரணம் கொண்டும் மத்திய அரசாங்கத்திடம் அதனைக் கையளிக்க மாட்டோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சும் யாழ்.மாநகர சபையும் இணைந்து குறித்த மண்டபத்தினை நிர்வகிப்பது தொடாடர்பில் இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட வரைபு தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு உறுப்பினார்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இந்து கலாசார அமைச்சுக்கு அறிவித்து அதனை நிர்வகிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன்; பணிபுரிந்த காலத்தில் குறித்த மண்டபம் தனியார் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது அத்துடன் சைவமகா சபையின் அனுசரணையுடன் யாழ்.மாநகர சபை ஆறுமுகநாவலரின் சிலையினையும் நிறுவியிருந்தது. அத்துடன் குறித்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு இந்து கலாசார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு யாழ்.மாநகர சபையினால் கோள்விகோரப்பட்டு குறித்த பணிகள் யாழ்.மாநகர சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ்.மாநகர சபையை வெளியேறுமாறும் அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் விடயத்தினை உறுதி செய்து கொண்டு இவ்விடயம் உண்மையெனின் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய தேவை அவைருக்கும் உண்டு. இவ் விடயத்தில் நாம் அசமந்த போக்கில் செயற்படுவோமாயின் இவ்வாறு உள்ளுராட்சி மன்றங்களின் ஆளுகைக்குள் இருக்கின்ற பல விடயங்கள் ஒரு கடிதத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் உடமையாக்கப்படும்.

குறிப்பாக யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பல விடயங்களில் மத்திய அரசாங்கத்தின் கழுகுப் பார்வை ஏற்கனேவே விழுந்துள்ள நிலையில் தற்போதைய நிலைமையினை தனக்கு சாதாமாக பயன்படுத்தி அவற்றினை தங்களுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையின் முதற்படியே இந்த நாவலர் கலாசார மண்டபம் யாழ்.மாநகர சபையிடமிருந்து பறித்தெடுக்கும் முயற்சி.

அண்மையில் பல நெருக்கடியான காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய நிர்வாக அதிகாரிகளை வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேற்றுவதும் வேறு அதிகாரிகளை வடக்கு மாகாணத்திற்கு கொண்டு வருவதும் பின்னர் அவர்களையும் வெளியேறுமாறு நிர்ப்பந்திப்பது என்று பந்தாடி வருதல், வர்த்தகமானி மூலமான யாழ்.மாநகர சபையின் முதல்வர் நியமித்தல், நியதிச் சட்டங்களை தன்னிச்iயாக இயற்றுதல் ஏன்று தொடர்ந்து அடாவடித்தனமாக செயற்படுகின்ற வடக்கு மாகாண ஆளுநர் தற்போது நாவலர் மண்டத்திலிருந்து யாழ்.மாநகர சபை வெளியேற வேண்டும் என்ற உத்தரவினையும் பிறப்பித்துள்ளார்.

இது வன்மையான கண்டத்திற்குரியது. யுhழ்.மாநகர சபையினை வெளியேற்றுவதற்கு ஆளுநர் எடுக்கும் முயற்சியினை வெறும் ஒரு கண்டத்துடன் கை கட்டி வேடிக்கை பார்க்க மடியாது. ஆளுநராக தான் கடமையாற்றுகின்ற இம் மண்ணின் பண்பாட்டு பாரம்பரிய விழுமியங்களை மதிக்காமல் இந்த மண்ணுக்கு சற்றும் சம்மந்தமில்லாத சிங்கள பௌத்த மேலதிக நடை உடை பாவனையுடனும் சிங்கள பௌத்த நடனத்துடனுடன் உலாவருகின்ற வடக்கு மாகாண ஆளுநர் குறித்த உத்தரவினை 29.03.2023 ஆம் திகதிக்கு முன்னர் மீளப்பெறவேண்டும். அவ்வாறு மீளப் பெறாத பட்சத்தில் 30.03.2023 வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் குறித்த உத்தரவினை மீளப்பெறும் வரை ஆளுநர் அலுவலகத்தின் முன் உண்ணாவிரத போராட்டத்தினை நான் ஆரம்பிப்பேன்.

யாழ்.மாநகர சபையினை நாவலர் மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு ஆளுநர் வழங்கிய உத்தரவு தொடர்பிலும் அவ் உத்தரவினை மீளப் பெறுமாறு கோரியும் எதிர்வரும் 27.03.2023 திங்கட் கிழமை ஆளுநருக்கு மகஜர் வழங்கப்படும். அதற்குரிய சாதகமான பதிலினைத் தரமறுக்கும் பட்சத்தில் குறித்த உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று, யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!