இளவரசர் ஹரிக்கு எதிராக ரஷ்ய கலைஞர் போட்டுள்ள திட்டம்!

ஆப்கானிஸ்தானில் 25 தலிபான் போராளிகளை கொன்றதாக அறிவித்த இளவரசர் ஹரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்ய சிற்ப கலைஞர் ஒருவர் சிற்பம் உருவாக்க திட்டமிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரி தனது நினைவுக் குறிப்பான ஸ்பேரில், ஆப்கானிஸ்தானில் பணியாற்றும்போது 25 போராளிகளைக் கொன்றதாக கூறியிருந்தார்.
    
மேலும், போரில் கொல்லப்பட்ட தலிபான் உறுப்பினர்களை போர்டில் இருந்து எடுக்கப்பட்ட ‘செஸ் பீஸ்கள்’ என்று குறிப்பிட்ட அவர், 25 என்பது எனக்கு திருப்தி அளிக்கும் எண் அல்ல, ஆனால் அது என்னை சங்கடப்படுத்தவும் இல்லை என்றும் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் ரஷ்ய சிற்ப கலைஞரான Molodkin இளவரசர் ஹரியின் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் தன்னை கோபப்பட வைத்ததாக கூறியுள்ளார். அத்துடன் ஆப்கானிஸ்தான் மக்களின் ரத்தத்தைக் கொண்டு, ஹரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிற்பம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலேஸில் உள்ள நான்கு ஆப்கானியர்கள் தங்கள் இரத்தத்தை தானம் செய்ததாகவும், பிரித்தானியாவைச் சேர்ந்த மேலும் ஐந்து பேர் அவ்வாறு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சிற்பத்திற்காக சுமார் 1,250 மில்லி லிட்டர் இரத்தம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியின் வீடியோவுடன் செயின்ட் பால் கதீட்ரல் மீது சிற்பத்தின் படத்தை முன் வைக்க Molodkin திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, உக்ரேனிய வீரர்கள் தானம் செய்த ரத்தத்தைப் பயன்படுத்தி, விளாடிமிர் புடினின் மிகப்பெரிய உருவப்படத்தை உருவாக்கினார். இதனால் சிறையில் அடைக்கப்படுவோம் என்று Molodkin அஞ்சுவதால் அவர் ரஷ்யாவுக்கு திரும்ப முடியாது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!