வெடியரசன் கோட்டையை விகாரையாக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்! March 30, 2023 6:57 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிா்ப்பு தொிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று கவனயீா்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் நெடுந்தீவு மக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தொிவித்தனா். நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன் வரலாற்றை திாிபுபடுத்துவதுடன், புதிதாக விகாரையை அங்கு கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றது. இதேபோல் கச்சதீவில் அதன் மத அடையாளத்தை மாற்றும் வகையில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே அரச மரங்களும் நாட்டப்பட்டிருக்கின்றது.இவற்றை கண்டித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், பொதுமக்களும் இணைந்து வெடியரசன் கோட்டையினை பாா்வையிட்டதுடன், அங்கு காலை சிறிது நேரம் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றிணையும் நடத்தியிருக்கின்றனா்.இந்த போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து மேலதிக பொலிஸாா் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பதற்றமான நிலையினை ஏற்படுத்தியதுடன், புலனாய்வாளா்களும் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…