நாவலர் மண்டப வழக்கு – ஆளுநரின் உத்தரவுக்கு இடைக்கால தடை!

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இருந்து, யாழ்ப்பாணம் மாநகர சபையை வெளியேற வடக்கு மாகாண ஆளுநர், பணித்தமைக்கு எதிராக, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இடைக்கால கட்டளை விதித்துள்ளது.
    
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாநகர சபையை, நாவலர் கலாசார மண்டபத்தில் இருந்து வெளியேற பணித்ததுடன், அதனை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளார்.

இதற்கு எதிராக, யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் ஆஜராகியிருந்த போது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இந்த இடைக்காலக் கட்டளையை பிறப்பித்துள்ளது.
வழக்கு, எதிர்வரும் 26 ஆம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!