அடுத்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் – மகிந்த தேசப்பிரிய

அடுத்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நான்கு ஆண்டுகள் பதவி வகித்ததன் பின் எந்த நேரத்திலும் தேர்தலை அறிவிக்க முடியும் என சிலர் வாதிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டவர் எனவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகியதனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை முன்கூட்டி நடத்துவது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். பதவிக் காலம் முடிவடையும் முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டுமாயின் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோருவதே பொருத்தமானது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!