டொனால்டு ட்ரம்ப் அதிரடி கைது!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து அவரது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்படும். நீதிபதி முன்பு ஒப்படைக்கப்படும் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் அதனைத் தொடர்ந்து வாசிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிக்கு கைவிலங்கு இடப்படவில்லை, மாறாக குற்றவாளிகளின் விரல் அடையாளங்கள் பதிவு செய்யப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
    
அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு சூழல் உருவாகும் என தாம் நம்பவில்லை என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே mugshot எனப்படும், பொலிஸ் தரவுகளுக்கான குற்றவாளிகளின் புகைப்படத்திற்கு முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப் உடன்படுவாரா என்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது சட்டத்தரணி ஒருவர் குறிப்பிடுகையில், உலகிலேயே அறியப்படும் நபர்களில் ஒருவரான டொனால்டு ட்ரம்பின் புகைப்படம் mugshot வடிவில் பொலிஸ் ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என தாம் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.

அப்படியான mugshot புகைப்படம் பதிவு செய்யப்பட்டாலும், அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வாய்ப்பில்லை எனவும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் அனுமதி தேவைப்படும் எனவும் கூறுகின்றனர்.

இதனிடையே, ட்ரம்பின் கைது நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. நீதிமன்ற விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என்றே வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப் மீது முன்வைக்கப்பட்டுள்ள மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் குற்றச்சாட்டு என்பது, ஆபாசப்பட நடிகை ஒருவருடனான உறவை மூடிமறைக்க, குறித்த நடிகைக்கு ட்ரம்ப் பெருந்தொகையை அளித்தார் என்பதேயாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!