பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தாமதமாகும்!

நீதிமன்ற விடுமுறை காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உள்ள தடைகளை கருத்திற்கொண்டு, அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை இன்னும் சில வாரங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
    
குறித்த சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே சட்டமூலத்தை சமர்ப்பிப்பது தாமதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் அரசாங்கம் என்ற வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த சட்டமூலம், இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!