கிழக்கிற்கு விரைவில் உள்நாட்டு விமான சேவை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறந்த வான் வழி இணைப்பு முக்கியமான தேவையாக இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே இந்த கருத்தை வெளியிட்டார்.

கிழக்கு மாகாணத்துக்கான புதிய உள்நாட்டு விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

ஏற்கனவே, கிழக்கில் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க, நான்கு நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளன.

கிழக்கின் சுற்றுலா வளர்ச்சிக்கு உள்நாட்டு விமான சேவை பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

போக்குவரத்து குறைபாடு தான், கிழக்கில் சுற்றுலா அபிவிருத்திக்கு உள்ள பிரதான தடைக்கல்லாக, அடையாளம் காணப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலைய அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விமான சேவை மூலம் இந்தக் குறைபாட்டுக்கு தீர்வு காண முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!