பிரித்தானியாவுக்குள் நுழைந்தது புதிய கொரோனா வைரஸ்!

புதிய வகை கொரோனா மாறுபாடு ஒன்று பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ், ஏற்கனவே பரவிய ஒமிக்ரான் கொரோனா வைரஸின் மற்றொரு துணை வைரஸாகும். Omicron sub-variant XBB.1.16 என்னும் இந்த வைரஸ், Arcturus கொரோனா துணை வைரஸ் என அழைக்கப்படுகிறது.
    
உலக நாடுகள் சிலவற்றில் கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகம் இந்த Arcturus கொரோனா துணை வைரஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பரவத் துவங்கியுள்ளது.
இந்தியா போன்ற நாடுகள், இந்த வைரஸ் பரவல் காரணமாக, மாஸ்க் அணிதல் போன்ற விதிகளை மீண்டும் கொண்டுவந்துள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய Arcturus கொரோனா துணை வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாவன, அதிக காய்ச்சல், இருமல், அரிப்பு அல்லது ஊறலுடன் கண்களில் தொற்று அல்லது கண்கள் சிவத்தல் முதலானவை ஆகும்.

மேலும், இந்த வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களிலேயே மிக எளிதில் தொற்றக்கூடிய வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த Arcturus கொரோனா துணை வைரஸ், தற்போது பிரித்தானியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி உறுதி செய்துள்ளது. என்றாலும், இப்போது, 100க்கும் குறைவானவர்களே பிரித்தானியாவில் இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஏஜன்சி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!