இலங்கை ஒரு ‘தோல்வியுற்ற நாடு’:சந்திரிக்கா ஆதங்கம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும் 75 வயதில் இலங்கை ஒரு ‘தோல்வியுற்ற நாடு’ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவர் மதன்ஜீத் சிங் விரிவுரையின்போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,எழுப்பத்தைந்து ஆண்டுகள் என்பது ஒரு தேசம் கணிசமான முன்னேற்றத்தை அடைய எடுக்கும் நீண்ட காலமாகும்.

இந்தநிலையில் காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட, சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!