பிரித்தானியாவை உலுக்கிய கொலை வழக்கு: நீதிமன்றத்தில் கதறி அழுத தாய்!

பிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் விசாரணைக்கு முன் தாய் அழுத சம்பவம் நடந்தது. கடந்த 1992ஆம் ஆண்டு நிக்கி ஆலன் என்ற 7 வயது சிறுமி கொல்லப்பட்டார். அவர் சந்தர்லாந்தில் தனது தாத்தா, பாட்டி வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், மறுநாள் பாழடைந்த கட்டிடத்தில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தார்.
  
இந்த சம்பவம் அந்நேரத்தில் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட டேவிட் பாய்ட் என்கிற நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். நிக்கி ஆலனை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட அவர், கடந்த காலத்தில் டேவிட் ஸ்மித் என்றும், டேவிட் பெல் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். அவர் 1993ஆம் ஆண்டு லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில், ஜார்ஜ் ஹெரான் எனும் நபர் நிக்கி ஆலனுக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட டேவிட் பாய்ட்டின் (55) விசாரணைக்கு முன் நீதிமன்றத்தில் இருந்த சிறுமியின் தாய் ஷரோன் ஹென்டர்சன் (56) கதறி அழுதார். அரசு தரப்பு வழக்கின் விளக்கத்துடன் வியாழக்கிழமை விசாரணை தொடங்க உள்ள நிலையில், இந்த வழக்கு ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!