சுவிஸில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்!

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
    
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டிரனாசோரஸ் ரெக்ஸ் என்ற வகையைச் சேர்ந்த அந்த டைனோசரின் சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை அனைத்தும் மொத்தமாக ஒரே எலும்புக்கூடாக சேர்க்கப்பட்டு, தற்போது சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதற்கு ‘டிரினிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் நீளம் 11.6 மீற்றர், உயரம் 3.9 மீற்றர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் 6.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இதனை ஏலத்தில் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!