சர்ச்சையில் சிக்கிய கனேடிய அமைச்சர்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக கூறி காணொளியொன்றை வெளியிட்ட கனேடிய அமைச்சர் ஒருவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்கஹ்ப்ரா சமூக வெளியிட்ட காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    
ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹை ஹீல் பாதணிகளை அணிந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆண்கள் ஹை ஹீல் எனப்படும் கூர்மையானதும் உயரமானதுமான சிகப்பு நிற பாதணிகளை அணிந்து காணொளி வெளியிட்ப்பட்டது.

எனினும், இந்த காலணி அணிந்த காணொளி டுவிட்டரில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஹரி போட்டர் நாவலாசிரியர் ஜே.கே. ரொவ்லிங்கஸ் உள்ளிட்டவர்கள் இந்த சமூக ஊடகப் பதிவிற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பெண்களை கேலி செய்யும் வகையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!