சத்தீஸ்கர் தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பத்து போலீசார் மற்றும் ஓட்டுனர் பலியாகினர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
    
மேலும் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். “சத்தீஸ்கர் போலீசார் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுக்கூரப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் டுவிட் செய்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!