இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) 2022 இல் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் (MCPA) தலைவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். 

இவ்வாறானதொரு பின்னணியில், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் பல காரணிகளால் சீர்குலைந்துள்ளதாக அவர் மேலும் கவலை தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் நாடாளுமனறில் தெரிவித்திருந்தார். 

உணவு வழங்குநர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவும் குறிப்பிட்டார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் பாதியளவான குடும்பங்களில் குழந்தைகளின் உணவு உட்கொள்ளல் குறைத்துள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

எனவே நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும் மக்களும் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!