அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சமகாலத்தில் பலாங்கொட உள்ளிட்ட பல பிரதேசங்களில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது.

ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசாங்க மருத்துவமனை அல்லது அரச பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!