14 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

இந்தியர்களின் முக்கிய விபரங்கள் திருடப்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களின் தகவல்களை திருடும் செயலிகளை அறிந்து அதனை தடை விதித்து வருகிறது. இதுதவிர சீனா மற்றும் சீனாவுடன் தொடர்பு கொண்ட செயலிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    
இந்நிலையில், இந்தியாவில் 14 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஐஎம்ஓ உள்ளிட்ட 14 மெசேஞ்சர் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தொடர்புடைய செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் மீடியா பயர், பிரேயர், பி சாட், கிருப்வைசர், எனிக்மா, செப் சுவிஸ், விக்கர்மி, நாந்த்பாக்ஸ், கோணியன், ஐ.எம்.ஓ., எலிமெண்ட், செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா ஆகிய 14 மெசஞ்சர் செயலிகள் அடங்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!