அமெரிக்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! – கரன்னகொட எச்சரிக்கை.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட , இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    
கடந்த 27ம் திகதி வடமேற்கு மாகாண ஆளுநரும், கடற்படையின் முன்னாள் தளபதியுமான அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

அவர் கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது நாட்டிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு, குறித்த தடை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உரிய நடவடிக்கையின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சட்டரீதியான சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் தமக்கு அறிவிக்கவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!