பிரித்தானியாவில் முதல்முறையாக தானியங்கி பேருந்து சேவை துவக்கம்!

பிரித்தானியாவில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. ஸ்கொட்லாந்தில் திங்கட்கிழமை முதல் ஓட்டுநர் இல்லா பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது பிரித்தானியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சாதனையாக பார்க்கப்படுகிறது.
    
ஐந்து பேருந்துகள் கொண்ட ஒரு குழுவானது திங்கள்கிழமை முதல் பயணிகளை ஏற்றிக் கொண்டு Inverkeithing, Fife and Edinburgh ஆகிய நகரங்களுக்கு அருகிலுள்ள Ferry toll இடையே பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, Forth Road Bridgeயின் 14 மைல் பாதையில் Stagecoach பேருந்து பயணிகளை அழைத்துச் சென்று சோதனை செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே பேருந்தில் இருந்தனர். அதில் ஒருவர் டிக்கெட் விற்பனையாளர், மற்றொருவர் தேவைப்பட்டால் வாகனத்தை கட்டுப்படுத்த இருக்கும் பாதுகாப்பு ஓட்டுநர் ஆவார்.

ஓட்டுநர் இல்லாமல் பயணம் செய்வது முற்றிலும் பாதுகாப்பானது என பேருந்து நிறுவனம் உறுதியளித்துள்ளது. வாரத்திற்கு 10,000 பயணிகளை ஏற்றிச் செல்வதை இந்த சேவை நோக்கமாக கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!