வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி நியமனம்

வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.  வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக இன்று (19.05.2023) அவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!