தனது ஆபாச போட்டோவை வெளியிட்ட காதலனிடம் ரூ.40 கோடி நஷ்டஈடு பெற்ற பெண்

ஆபாச புகைபடத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஜேன் டோயே. இவர் டேவிட் கே இலாம் என்பவரை காதலித்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக ஜேனின் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆபாச பட வெப்சைட்டில் டேவிட் வெளியிட்டார்.

இவரை துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு தள்ளி தற்கொலை செய்ய வைப்பேன் என்றும் மிரட்டி வந்தார். அதுகுறித்து கலிபோர்னியா மாவட்ட கோர்ட்டில் ஜேன் வழக்கு தொடர்ந்தார். இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு பாதிக்கப்பட்ட ஜேனேவுக்கு அவரது காதலன் டேவிட் ரூ.40 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

சமீப காலங்களில் பழி வாங்கும் நடவடிக்கைக்காக செக்ஸ் போட்டோக்கள் வெளியீடு தொடர்பாக அதிக நஷ்டஈடு தொகை வழங்க உத்தரவிடப்பட்ட வழக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் சீட்டில் பகுதியில் நடந்த இது போன்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.60 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!