சூரிய ஒளியினால் கண்களுக்கு ஆபத்து!

சிறுவர்கள் உட்பட அனைவரினதும் கண்களில் நேரடியான சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும் தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் டொக்டர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தியுள்ளார்.
    
நேரடி சூரிய ஒளி அதிகமாக பார்க்கும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்ணாடிகள் அணிவதன் மூலம் சில கண் பிரச்சினைகள் வராதவாறு தவிர்க்கலாம் என்று குறிப்பிட்ட அவர், நேரடி சூரிய ஒளியால் வாந்தி, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் வைத்தியர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறுவது சிறந்தது எனவும் நீரிழப்பைத் தடுக்க தண்ணீர் மற்றும் திரவங்களை அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!