கொரோனா தொடர்பில் உண்மையை ஒப்புக்கொண்ட சீனா!

உலக நாடுகளை மொத்தமாக முடக்கிய கொரோனா பெருந்தொற்று ஆய்வக கசிவாக இருக்கவே அதிக வாய்ப்பு என முன்னாள் சீன அரசாங்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    
கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் மற்றும் தொடர்புடைய தொற்றின் பாதிப்பு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டவர்களில் முதன்மையானவர் பேராசிரியர் ஜார்ஜ் காவ். இவரே தற்போது சீன அரசாங்கம் இதுவரை சாதித்து வந்ததை மறுத்துள்ளார்.

வூஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படும் தரவுகளை சீனா அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் பேராசிரியர் காவோ இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படையாக பேசவில்லை.

எப்போதும் எதையும் சந்தேகிக்கலாம். அதுதான் அறிவியல். எதையும் நிராகரிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் காவ். உலகின் முன்னணி வைராலஜிஸ்ட் மற்றும் நோயெதிர்ப்பு நிபுணராக செயல்பட்டவர் பேராசிரியர் காவ்.

கொரோனா தொடர்பில் அவர் தெரிவிக்கையில், சீன அரசாங்கம் ஏதோ ஏற்பாடு செய்தது, அது மட்டும் உண்மை. வூஹான் ஆய்வகத்திலும் முதற்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்றார்.
வூஹான் ஆய்வகத்தில் சீன அரசாங்கம் விசாரணை முன்னெடுத்துள்ளது எனில், கொரோனா ஆய்வக கசிவு என்பதை சீனா ஒப்புக்கொள்கிறது என்றே கருத வேண்டும் என கூறுகின்றனர்.

வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது வெளவால்களில் இருந்து கொரோனா பரவியுள்ளது உண்மை, ஆனால் அது எவ்வாறு மனிதர்களில் பரவியது என்பது தான் விவாதத்திற்குரிய கேள்வி என்கிறார்கள். இதற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஒன்று, இயற்கையாகவே வௌவால்களிடமிருந்து மற்ற விலங்குகள் வழியாக வைரஸ் மனிதர்களுக்கு பரவியது. பெரும்பாலான விஞ்ஞானிகளும் இதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றே நம்புகின்றனர்.

இன்னொன்று, இந்த வைரஸ் பாதிக்கப்பட்டால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற ஆய்வுகளால் இது மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என கூறுகின்றனர். இந்த இருவேறு கருத்துகளும் மிகவும் அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த அறிவியல் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!