அமெரிக்காவில் 160 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று மின்னல் தாக்கியதில் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஸ்பென்சரில் உள்ள முதல் காங்கிரேஷனல் யுனைடெட்(First Congregational Church) என்ற 160 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    
தேவாலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த அபாய கருவியின் எச்சரிக்கை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து தீயணைக்கும் பணியில் இறங்கினர். ஆனால் அதற்குள் தீ தேவாலயத்தின் தரை தளம் முதல் கோபுரம் வரை பரவியது, இதில் தேவாலயத்தின் மேல் கோபுரம் தரையில் விழுந்து நொறுங்கியது.

தேவாலயத்தில் ஏற்பட்ட இந்த விபத்தின் போது பக்தர்கள் யாரும் உள்ளே இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் 1800களில் கட்டப்பட்டது என்று தேவாலயத்தின் இடைக்கால போதகர் மேக்லியோட் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் வழங்கிய தகவலில், மழைப்பொழிவின் போது ஏற்பட்ட மின்னலில் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!