அரபிக் கடலில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட போர் பயிற்சி!

இந்திய கடற்படையின் கடல்சார் திறனை பிரதிபலிக்கும் விதிமாக அரபிக் கடலில் நேற்று பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, ஐ.என்.எஸ். விக்ராந்த் ஆகிய 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் பங்கேற்றன.
    
அப்போது 35-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் விக்ரமாதித்யா, விக்ராந்த் போர்க்கப்பல்களில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தன. இந்திய ராணுவத்தை சேர்ந்த எம்.எச்.60ஆர், காமோவ், சீ-கிங், சேத்தக் ரகங்களைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் போர்க்கப்பல்களில் இருந்து மேல் எழும்பின.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் கூறும்போது, “நாட்டின் பாதுகாப்பு, இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட போர் பயிற்சிகளில் இது மிகவும் முக்கியமானது. ஒரே நேரத்தில் 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!