தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணையுமாறு சஜித் அழைப்பு!

இப்போதாவது அவசர முடிவுகள் எடுக்காமல், எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி, எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒரே குரலில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
    
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சரியானதற்கு சரி என்று கூறினாலும் தவறானவற்றுக்கு உடன் படப்போவதில்லை எனவும், பல்வேறு தந்திர மந்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல் தாம் எடுத்த முட்டாள் தனமான முடிவுகளை அவ்வாறே ஒப்புக் கொண்டு, புதிய வழியில் முன்னோக்கிச் செல்ல ஒன்றுபடுமாறும், இந்நாட்டு மக்களின் வைப்புத் தொகைகளின் பெறுமதியைப் பாதுகாக்கத் தயாராக இருந்தாலும் அரசாங்கம் சொல்வதெற்கெல்லாம் கை தூக்கத் தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்துடன் தொடர்பான தரவுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியால் அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவர் அதனை வழங்கவில்லை எனவும், ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்தால், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தம் மக்கள் தரப்பில் வலுப்படுத்தி முற்போக்காக செயல்படுத்தும் சாத்தியம் இருந்தும், அது நடக்கவில்லை எனவும், இந்த தரவுகள் நாட்டிற்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதை ஏற்றுக் கொண்டாலும், இந்த உடன் படிக்கைகளை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் நடைமுறைப்படுத்த முடியும். என ஐக்கிய மக்கள் சக்தி நம்பினாலும், மத்திய வங்கியின் ஆளுநரும், நிதி இராஜாங்க அமைச்சரும் உள்நாட்டுக் கடனை மறு சீரமைக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருந்த போதிலும், உள்நாட்டுக் கடனை மறு சீரமைப்பதாக ஜனாதிபதி கூறியமை ஆச்சரியமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நேரத்தில் ஒரு விடயத்தையும் மற்றொரு நேரத்தில் இன்னொரு விடயத்தையும் கூறி ஒன்றுக்கொன்று பரஸ்பர முரண்பாடான கருத்துக்களை கூறுவதில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் அற்றுப்போவதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், உலகின் பெரும்பாலான நாடுகள் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாது சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களுக்குச் செல்லலாம். என்பதிலும் இலங்கையால் இவ்வாறானதொரு ஒப்பந்தத்திற்குச் செல்ல முடியாது என்பதற்குமிடையில் ஏதே மறைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
.
இந்த உடன் படிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் அரசாங்கம் மக்களைப் பற்றியோ அல்லது பொது நல வைப்புத்தொகைகள் மற்றும் பணிக்கொடை வைப்புத் தொகைகள் பற்றியோ சிந்திக்கவில்லை எனவும், முற்போக்கான எதிர்க்கட்சியாக இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கலாநிதி நாலக கொடஹேவா, எரான் விக்கிரமரத்ன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களும் கீழ் காணும் இணைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!