ஜப்பானில் 25,000 பேருக்கு கட்டாயக் கருத்தடை!

ஒரு ஒன்பது வயது சிறுவன், ஒரு ஒன்பது வயது சிறுமி உட்பட, 25,000 பேருக்கு ஜப்பானில் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஜப்பானில் இரண்டாம் உலகப்போருக்குப் பின் National Eugenic Law என்னும் ஒரு கொடிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    
அந்த சட்டத்தின்படி, குறைகள் உடையவர்கள் சந்ததியை உருவாக்கக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் உடற்குறைபாடுகள், அறிவாற்றல் பிரச்சினைகள் கொண்டவர்கள், மன நல பிரச்சினைகள் கொண்டோருக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் இருண்ட அத்தியாயம் என அழைக்கப்படும் காலகட்டத்தில் நிகழ்ந்த இந்த பயங்கரத்தால் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பயங்கரம் தொடர்பான அரசு விசாரணை ஒன்று 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், திங்கட்கிழமை, ஜப்பான் நாடாளுமன்றம் அது தொடர்பான 1,400 பக்க ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த ஆய்வறிக்கையில், சுமார் 25,000 பேர் கருத்தடை அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 16,000க்கும் அதிகமானோரின் சம்மதம் இல்லாமலே இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண்டிக்ஸ் (குடல்வால்) அறுவை சிகிச்சை செய்வதாக சில ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு ஒன்பது வயது சிறுவனும், ஒரு ஒன்பது வயது சிறுமியும் அடங்குவார்கள்.
தற்போது இந்த அதிரவைக்கும் செய்தி வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் மக்கள் அது குறித்துக் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், ஒன்பது வயது பிள்ளைகளையுமா இப்படி நடத்துவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள் பலர்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!