அலி சப்ரி நாளை சீனாவுக்குப் பயணம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் சீனா செல்லவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவில் தங்கியிருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!