விதிகளை மீறி பிரித்தானிய ராணியை முத்தமிட்ட நபர்!

ராஜ குடும்ப விதிகளை மீறி, பிரித்தானிய ராணியான கமீலாவை முத்தமிட்டார் ஒருவர். அவர் யார் தெரியுமா? ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, ராஜ குடும்ப உறுப்பினர்கள், ஒருவரை அணைக்கவோ, கைகுலுக்கவோ முன்வந்தால் மட்டுமே மற்றவர்கள் ராஜ குடும்பத்தினரைத் தொடலாம். மற்றபடி, யாரும் தாமாக ராஜ குடும்ப உறுப்பினர்களைத் தொடக்கூடாது.

அப்படி தொடுவது விதி மீறலாகும். ஆனாலும், அந்த விதி மீறலுக்கு தண்டனை எதுவும் கிடையாது என்பது ஒரு நல்ல விடயம். ஆனால், பிரித்தானிய ராணியான கமீலாவின் கன்னத்திலேயே முத்தமிட்டுள்ளார் ஒருவர். அவர், உலகப்புகழ் பெற்ற குதிரைப் பந்தய வீரரான Frankie Dettori என்பவர் ஆவார்.

சமீபத்தில் நடந்த குதிரைப் பந்தயம் ஒன்றில் தங்கக் கோப்பையை வென்றார் Dettori. வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அவர் கமெராவை முத்தமிட்டார், தனது ரசிகர்களை முத்தமிட்டார், நண்பர்களை முத்தமிட்டார், தன் குடும்பத்தினரையும் முத்தமிட்டார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அவருக்கு தங்கக் கோப்பையை பரிசளிக்க வந்திருந்தார்கள் மன்னர் சார்லசும், ராணி கமீலாவும்.

எல்லருக்கும் முத்தமிட்டுக்கொண்டிருந்த Dettori, ராணியைக் கண்டதும், அவரது கன்னத்திலும் முத்தமிட்டார். உண்மையில் அது மிகப்பெரிய விதி மீறலாகும். ஆனாலும், ராணியோ, மன்னரோ அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை, கோபப்படவும் இல்லை. காரணம், Dettori ராஜ குடும்பத்துக்கு அந்நியர் அல்ல. 30 ஆண்டுகளாக, மறைந்த பிரித்தானிய மகாராணியார் எலிசபெத்தின் குதிரைகளை ஓட்டிவந்தவர் அவர்தான்!
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!