அரசாங்கத்திடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கை

பனை அபிவிருத்தி சபையை வினைதிறன் மிக்கதாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கும் பனைவளம் பெரும்பங்காற்றி வருகிறது. பனை அபிவிருத்திச் சபையானது 1978ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்திச் சட்டத்தின்கீழ், யாழ்ப்பாணத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு, பனையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் பனை வளம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனவும் உருவாக்கப்பட்ட ஒரு சபையாகும்.

இலங்கையின் பனை வளமானது முழுமையாக வடக்கு-கிழக்கையே சார்ந்துள்ளது. ஏறத்தாழ 11இலட்சம் பனை வளம் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. ஆனால், இதைக் கொண்டு நடத்தும் பனை அபிவிருத்திச் சபையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இதனால் சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பனை வளத்தினை நம்பி வாழும் குடும்ங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பனைவள அபிவிருத்தியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!