புற்று நோயை கண்டறியும் செயலியை கண்டுபிடித்த கனடியர்!

கனடிய பொறியியலாளர் ஒருவர் புற்று நோயை கண்டறிய கூடிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த செயலி, தோல் புற்றுநோய் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கக்கூடிய செயலி என தெரிவிக்கப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவு ஆய்வு தகவல்களின் அடிப்படையில் ஒருவருக்கு தோல் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பது குறித்து தகவல்களை வழங்க இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
    
மருத்துவமனைக்குச் செல்லாது வீட்டிலேயே இருந்து கொண்டு தோல் புற்றுநோய் தொடர்பில் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஹார்ஷ் ஷா (Harsh Shah) என்ற பொறியியலாளரே இந்த ஸ்கின் செக்அப் (Skin CheckUp) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

கனடாவில் டொரன்டோவில் வசித்து வரும் இவர் ஏற்கனவே டெஸ்லா, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற மோட்டார் போக்குவரத்து தொழில் நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் தோல் மருத்துவ நிபுணர் ஒருவரை சந்திப்பதற்கு அல்லது ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கு சராசரியாக கனடியர்கள் 90 நாட்கள் வரையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக ஷா தெரிவித்துள்ளார்.

எனவே இந்த புதிய செயலியின் ஊடாக தோளில் ஏற்படக்கூடிய நோய் நிலைமைகளை கண்டறிய முடியும் என அவர் தெரிவிக்கின்றார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் முறைமை ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் நோய்க்காரணிகள் கண்டறிவப்படுவதாக தெரிவிக்கின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!