தீர்வுக்கு ஆதரவளித்தால் இந்திய நலனுக்காக பாடுபடுவோம்! – கடிதம் அனுப்புகிறது முன்னணி.

ஒற்றையாட்சியைத் தாண்டி தமிழ் தேசம், இறைமை, சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம் என இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு இந்திய துணைத் தூதரகம் ஊடாக அனுப்பவுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
    
கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். அதனை ஒட்டி தமிழ் மக்களுடைய 75 ஆண்டுகால இனப் பிரச்சினைக்கு தீர்வு விடயத்திலே இந்தியா ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்

என்ற அடிப்படையிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கடிதம் ஒன்று திங்கள்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பொறுப்பதிகாரிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.
அதனுடைய பிரதி மின்னஞ்சல் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள துணை தூதுவருக்கு அனுப்பப்பட்டு அதனை இந்திய பிரதமருக்கு அனுப்புமாறு கேட்டு இருக்கின்ற மின்னஞ்சல் கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

75 வருட ஆண்டு காலம் புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு தீர்வும் பொருத்தப்பாடு உடையது அல்ல. குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதனை சுட்டிக்காட்டி ஒற்றை ஆட்சியைக் கடந்து தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதான ஒரு தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கடிதம் அனுப்பப்படுகிறது.

அவ்வாறான ஒரு சுயாட்சி எட்டப்படுகின்ற பொழுது இந்த நாடு ஒரு புதிய சமஸ்டியை கொண்டு உருவாக்கக்கூடிய நாடு இந்தியாவில் நலன்களுக்கு மாற போகாமல் இந்தியாவின் நலன்களை பேணுவதற்கு ஒத்துழைக்கும். குறிப்பாக தமிழ் தேசம் இந்தியாவின் நலன்களிலே அக்கறையோடு செயல்படும் என்கின்ற விடயமும் இதில் உள்ளடக்கி இருப்பதாக பா.உ செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!