கனடாவில் பாலியல் தொழில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

கனடாவில் பாலியல் தொழில் தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. கனடாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக இந்த சர்ச்சை நிலை உருவாகி உள்ளது. கனடாவில் பாலியல் சேவை வழங்குவது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    
இவ்வாறான ஓர் பின்னணியில பாலியல் சேவை பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் உறுதியளித்த பணத்தொகையை வழங்கவில்லை என பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நோவா ஸ்கோட்டியா நீதிமன்றம் குறித்த பெண் பாலியல் தொழிலாளிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஹாலிபெக்ஸைச் சேர்ந்த Brogan Sheehan என்ற பெண் பலியல் தொழிலாளியே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பாலியல் தொழிலாளிகள் நீதிமன்றின் உதவியை நாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது ஒரு சாதக நிலைமையாக கருதப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கனடாவில் பாலியல் தொழிலை சட்டரீதியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!