அதிக அளவு மோமோக்களை சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த கதி!

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின் குமார்.வயது (25).இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று வழக்கம்போல வேலைக்கு சென்ற அவர், மாலை வேளையில் தனது நண்பர்களை சந்தித்துள்ளார். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பீகாரின் பிரபல உணவான மோமோ சாப்பிட முடிவு செய்து சென்றுள்ளனர்.அப்பொழுது அவர்களுக்கிடையே யார் அதிகபட்ச மோமோக்கள் சாப்பிடுகிறார்கள் என்று போட்டி வைத்து உள்ளனர்.
    
அதில் விபின் குமார் நண்பர்களின் சவாலை ஒப்புக்கொண்டு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான மோமோக்களை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட அவர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உள்ளார். உடனே நண்பர்கள் பதறி அவசரமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் பிறகு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபின் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடந்த இச்சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினர்,’வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்’ என்று தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், குமாரின் தந்தை, தனது மகனின் நண்பர்கள் அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் தனது மகனிடம் அவருடைய நண்பர்கள் வேண்டுமென்றே சவால் விட்டதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் இதுவரை விபின் குமாரின் குடும்பத்தின் சார்பில் எந்த புகாரும் காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!