நான் ரணில் ராஜபக்ச அல்ல! – சுமந்திரனுக்கு பதிலடி.

நான் ரணில் விக்கிரமசிங்க ரணில் ராஜபக்ச அல்ல என ஜனாதிபதிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் இன்று இடம் பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு பதிலளித்தார்.
    
மஹிந்த ராஜபக்ஷ 13 + தீர்வினை வழங்க தயாராக இருப்பதாக முன்னர் அறிவித்திருந்தார் அதேபோல் நாமல் ராஜபக்ச பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பிலும் பேசியிருந்தார்
குறிப்பாக நீங்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி காலத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றினை பெற்று தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருந்தீர்கள்

எனினும் தற்போது நீங்கள் ஜனாதிபதியாக உள்ளீர்கள் எனினும் நமக்கான அதிகாரபகிர்வினை காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் அற்ற ஒரு தீர்வினை வழங்குவதற்கு நீங்கள் முயற்சிப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த போது இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க நான் ரணில் விக்கிரமசிங்க ரணில் ராஜபக்ச அல்ல என நகைச்சுவையாகப திலளித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!